தமிழக அரசின் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் உடனடி வேலை! 30 ஆயிரம் வரைக்கும் சம்பளம் தராங்களாம்! சீக்கிரமா விண்ணப்பியுங்க…!

DHS Kancheepuram Recruitment 2024 Notification Released

DHS Kancheepuram Recruitment 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நிரல் மேலாளர், தரவு உதவியாளர், பல்நோக்குப் பணியாளர்கள் என்ற பதவிகளுக்கு நான்கு காலி இடங்களை நிரப்ப உள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தபால் வழியாக அப்ளை செய்யலாம் என அறிவித்துள்ளது.

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பணியாற்ற மொத்தம் நான்கு காலி இடங்கள் உள்ளது. அதில் நிரல் மேலாளர் (District Programme Manager) பதவிக்கு 01 காலியிடம், தரவு உதவியாளர் (Data Assistant) பதவிக்கு 01 காலியிடம், பல்நோக்குப் பணியாளர்கள் (Multipurpose Worker) பதவிக்கு 02 காலியிடங்கள் என 04 பணியிடங்கள் உள்ளது.

DHS அறிவித்த நிரல் மேலாளர் பதவிக்கு டிகிரி படிப்பை படித்திருக்க வேண்டும். தரவு உதவியாளர் பதவிக்கு BE/B.Tech, BBA, BCA, B.Sc, Graduation என்ற இந்த படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதே போல பல்நோக்குப் பணியாளர்கள் பதவிக்கு நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Also Read >> கரூர் வைஸ்யா வங்கியில் கொட்டிகிடக்கும் பல்வேறு காலி இடங்கள்! தமிழகத்திலே வேலை செய்ய ரெடியா?

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை செய்ய தேர்வு செய்யப்படும் நிரல் மேலாளர் நபருக்கு மாதம் ரூ.30,000 கொடுக்கப்படும். தரவு உதவியாளர் பணியாளருக்கு மாத சம்பளமாக ரூ.15,000 கொடுக்கப்படும். அதே போல பல்நோக்குப் பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.300 ஊதியமாக வழங்கப்படும்.

விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவங்களை நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் / துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், காஞ்சிபுரம் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இவ்விண்ணப்பத்துடன் பணியிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 18.01.2024 அன்று மாலை 05.45 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி

நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் / துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 501, தொலைப்பேசி எண் 044-27222019

மேலும் விவரங்களை அறிய DHS Kancheepuram Recruitment 2024 Notification என்ற இந்த லிங்கை கிளிக் பண்ணவும்.

தமிழ்நாடு அரசாங்க வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top