இளையராஜாவின் வாழ்க்கை படமாகிறது…! ஹீரோவாக நடிக்கும் பிரபல நடிகர்!

Today Cinema News 2023

தமிழ் திரையுலகிலே இசை ஞானியாக வலம் வருபவர் இளையராஜா. 1976ஆம் ஆண்டு அன்னக்கிளி படத்தின் மூலன் இசையமைத்தார். இவர் கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து இசை ஜாம்பவனாக இருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இவர் தனது கால்தடம் பதித்துள்ளார். இவருடைய பாடலக்கு மயங்காதவர்களே இல்லை. இப்படியாக ரசிகர்கள் மத்தியில் இன்றும் இடம் பிடித்திருக்கிறார்.

இந்நிலையில், இளையராஜாவின் வாழ்க்கையை படமாக எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை இயக்குனர் ஆர்.பால்கி இயக்க உள்ளதாகவும் அதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இயக்குனர் பேட்டி ஒன்றில் கூறியபோது…

இளையராஜா மூன்று தலைமுறைகளுக்கு இசையமைத்துள்ள தலைசிறந்த இசையமைப்பாளர் ஆவார். இந்நிலையில் இவரது வாழ்க்கை படத்தை எடுத்தால் இளையராஜாவாக நடிக்க தனுஷின் தோற்றம் சரியாக இருக்கும் என முடிவு எடுத்துள்ளோம். மேலும், இளையராஜா தோற்றத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதை பார்க்க மிகவும் ஆசைபடுகிறேன். இதில் தனுஷை நடிக்க வைப்பது தான் நான் அவருக்கு கொடுக்கும் பரிசாக இருக்கும். ஏனென்றால் என்னைப்போலவே இளையராஜாவின் தீவிரமான ரசிகர் தனுஷ் என இவ்வாறு கூறினார்.

இந்த நிலையில் ரசிகர்களின் ரியாக்‌ஷன் எப்படியெனில் இளையராஜாவை வைத்து படம் எடுக்கப்போகும் செய்தி வந்ததில் இருந்து பலர் சிரிப்புடனும் சிலர் முறைப்புடனும் இருக்கின்றார். காரணம் சமீப காலமாகவே மேடை நிகழ்ச்சிகள் அல்லது பொது வெளியில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொள்ளும் போது சக கலைஞர்களுக்கு மறியாதை குறைவாக நாக்கிறார் என பேச்சு பொருளாக அடிபடுகிறது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM