ரேஷன் கடையில் வாங்காத பொருளுக்கு பில் போட்டால்… இனி அவ்வளவு தான்… கடும் எச்சரிக்கை…!

0
19
Latest Today News 2023

ரேஷன் கடைகளில் நம்முடைய அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் வாங்குகிறோம். இத்தகைய பொருட்களை விற்பனை செய்ய PoS எனப்படும் விற்பனை முனையக் கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. அதாவது ரேஷன் அட்டையில் குடும்பத்தில் உள்ள நபர்கள் யாராவது ஒருவர் கைரேகை வைத்து, பதிவு செய்யப்பட்டப்பின் பொருட்கள் வழங்கப்படுகிறது.

மேலும், குடும்ப அட்டைதாரர்கள் கேட்கும் பொருளுக்கு மட்டுமே பில் போடப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வழக்கப்பட வேண்டும் என ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ஏற்கனவே பலமுறை அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றுக்கையில் கூறியது என்னவென்றால், ரேஷனில் வாங்காத பொருளுக்கு வாங்கியதாக பில் போடப்பட்டு மெசேஜ் பெறப்பட்டதாக கூறி ரேஷன் குடும்ப அட்டைதாரர்கள் ஏதேனும் புகார் தெரிவித்தால் உடனடியாக கடை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here