Today Latest Cinema News in Tamil 2023
பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற பிரபலமான நடிகர்கள் நடித்த படங்களில் நாயகியாக நடித்தவர் மாளவிகா மோகன். இவர் இந்தி, மலையாளம், கன்னட போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் படங்கள் நடிப்பதற்கு புதிய நிபந்தனைகளை தெரிவித்துள்ளார்.

எனக்கு முக்கியத்துவம் இல்லாத கதாப்பாத்திரமாக இருந்தால் நான் நடிக்க மாட்டேன். அது ரூ.500 கோடி வசூலை அள்ளி தரும் வெற்றிப்படமாக இருந்தாலும் சரி நடிக்கவே மாட்டேன். என்ன தான் பிரமாண்டமாக படம் ஓடி வசூல் கொட்டினாலும் முக்கியத்துவம் இல்லாத காதபாத்திரமாக இருந்தால் யாரும் நினைவில் வைக்க மாட்டார்கள். அதனால தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
மேலும், ஷோபனா, ஊர்வசி, கஜோல், மாதுரி தீட்சித் போன்ற நடிகைகள் எந்தனை வருசங்கள் கடந்தும் அவர்கள் ரசிகர்கள் மனதிலே நீங்காத இடத்தை பிடிக்கும் கதாபாத்திரங்களில் நடித்தார்கள். அவர்களுடைய வழியிலே நானும் செல்ல நினைக்கிறேன். நல்ல படங்களை தரும் திறமையான டைரக்டர்கள் படங்களில் மட்டுமே நடிக்க ஆசை என இவ்வாறு தனது புதிய நிபந்தனைகளை கூறியுள்ளார்
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டில் வேலை அறிவிப்பு! பட்டதாரிகள் அனைவரும் அப்ளை பண்ணலாம்…!
- JIPMER புதுச்சேரியில் 10th, 12th, Diploma, M.Sc, MBBS படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! 41300 மாச சம்பளமா வாங்கிடலாம்…!
- மாதம் 31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசாங்க வேலை! விருப்பமுள்ளவங்க வாக்-இன் இன்டர்வியூக்கு செல்ல ரெடி ஆகுங்க…!
- UPSC யில் வேலை செய்ய ஆர்வமா இருக்கீங்களா? இந்தியாவில் எந்த பகுதியிலும் வேலை பார்க்கலாம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!
- IRCON நிறுவனத்தில் மாதம் ரூ.218200 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உங்க ஈமெயில் அட்ரஸ்ல சுலபமா விண்ணப்பிக்கலாம்…!