தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற சிறப்பு பெயரை பெற்றவர் நடிகர் விஜய். இவர் இதுவரை 67 படங்களில் நடித்துள்ளார். இவருடைய 67 வது படம்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய “லியோ”. இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. லியோ படத்தின் படபிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், தற்பொழுது நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இந்நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்க்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறன்றன. தளபதி 68 படத்திற்காக நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் மீபத்தில் அமெரிக்காவிற்கு சென்றனர். அங்கு அதிநவீன முறையில் நடிகர் விஜய்யின் முகம் 3D ஸ்கேன் செய்யப்படும் புகைப்படத்தையும் கூட இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு இருந்தார்.
Also Read : சூரியனை நோக்கிய பயணத்தை தொடங்கிய ஆதித்யா எல் 1..! கைதட்டி மகிழ்ச்சியை வெளிபடுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள்!!
இதனையடுத்து, நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இருவரும் திரையரங்குக்கு சென்று ‘தி ஈகுவலைசர் 3’ திரைப்படத்தை பார்த்தனர். படத்தை பார்த்தவுடன் நடிகர் விஜய் தன்னுடைய படங்களை திரையரங்கில் ரசிகர்கள் எந்த அளவிற்கு பார்த்து கொண்டாடி கைகளை தூக்கிக்கொண்டு போஸ் கொடுப்பார்களோ அதே போல விஜய்யும் அதுபோன்று போஸ் கொடுத்துள்ளார். அதற்கான புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு விஜய் ஃபேன் பாயாக மாறிய தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
