தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே தக்காளியின் விலை உச்சத்தில் இருந்தது. அதிலும் குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. காலநிலை மாற்றம் காரணமாக பருவம் தவறி பெய்த மழையால் தக்காளி விளைச்சல் குறைந்தது. இதனால் தமிழகத்துக்கு வரும் தக்காளியின் வரத்தும் குறைந்ததால் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு கிலோ 200 ரூபாய் என்ற நிலையை எட்டியது. இதன் காரணமாக தக்காளியை பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்கிய நிலை மாறி எண்ணிக்கையில் வாங்கி சென்றனர்.

இதனையடுத்து தக்காளி விலை உச்சத்தில் இருந்ததால் தமிழக அரசு சார்பாக நியாய விலைக்கடைகளில் தக்காளியை ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அரசின் இந்த முயற்சி அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்காததால் பலரும் கடைகளில் அதிக விலை கொடுத்துதான் வாங்கி வந்தனர்.
Also Read : “நானும் ரசிகன் தாண்டா… ” இந்த படத்தை பார்த்து ரசித்த நடிகர் விஜய்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!
இந்நிலையில், தக்காளி வரத்து அதிகரித்த வருவதால் உச்சத்தை தொட்ட தக்காளி விலை தற்பொழுது குறைய தொடங்கியுள்ளது. ஒரு கிலோ 200 விற்ற நிலையில் தற்போது 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லரை வர்த்தகத்தில் 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையும் தக்காளி விற்பனை ஆகிறது. தக்காளி விலை உச்சத்தை தொட்டதால் விவசாயிகள் அதிகளவு தக்காளி பயிரிட்ட காரணத்தில் கோயம்பேட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.