சீக்கிரமாக வீட்டு வேலைகளை செய்வது எப்படி? பெண்களுக்கான டிப்ஸ்..! House Cleaning Tips in Tamil

0
71

பெண்களின் வாழ்கையில் ஒரு பங்கு அவர்கள் செய்யும் வீட்டு வேலைதான் என்பது குறிப்பிடத்தக்கது. தினம்தோறும் காலை எழுந்ததிலிருந்து இரவு உறங்கும் முன் வரை வீட்டில் ஏதாவது ஒரு வேலை இருந்து கொண்டுதான் இருக்கும். அதிலும் இல்லத்தரசிகளுக்கு வீட்டு வேலை செய்வதே ஒரு வாடிக்கையாக மாறி விட்டது. அவர்களுக்கு என ஒரு பொழுதுபோக்கு நேரத்தைக் கூட செலவிட முடியாத ஒரு நிலை. அதையும் தாண்டி கிடைக்கும் நேரத்தில் ஓய்வு எடுக்கலாம் என எண்ணினாலும் ஏதேனும் ஒரு வேலை வந்து விடுகிறது.

இப்படி தங்களுக்கு என ஒரு பொழுதுபோக்கிற்காக நேரத்தை செலவிட முடியாத பெண்களுக்காக வீட்டு வேலைகளை சீக்கிரமாக முடித்து விட்டு ஓய்வு எடுக்கும் வகையில் ஆறு உதவி குறிப்புகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.

House Cleaning Tips in Tamil

டிப்ஸ் – 01

வீட்டு வேலைகளில் ஒரு முக்கிய பங்கு துணி துவைத்தல். அதற்கான வேலையில் நாட்டம் கொள்ளும் போது அந்த அழுக்கு துணிகளை துவைக்கும் முன் அவற்றை ஊறவைப்போம், அப்பொழுது அவற்றில் ஏதெனும் ஒரு துணியின் சாயம் மற்றொரு துணியின் மேல் சாயம் ஒட்டி கொள்ளும். அவற்றை நீக்குவதே ஒரு சாவல் தான். அவற்றை எளிதில் நீக்க சமையலுக்கு பயன்படுத்தப்படும் வினிகரை சாயம் படித்துள்ள இடத்தின் மேல் ஊற்றி அவற்றை கைகளால் நன்கு தேய்த்து 20 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பின்னர் குளிக்க பயன்படுத்தும் ஏதேனும் ஒரு சோப்பு கொண்டு தேய்த்தால் அதில் இருக்கும் சாயம் நீங்கி விடும்.

டிப்ஸ் – 02

துணி துவைப்பது ஒரு கடினம் என்றால் அவற்றில் உள்ள கறைகளை நீங்குவது என்பது மிகவும் கடினமான வேலை. அதிலும் துணிகளில் ஏதேனும் ஒரு சந்தர்பத்தில் இரத்த கறை படிந்து இருக்கும். அவற்றை எளிய முறையில் நீங்குவதற்கு நன்றாக கொதிக்கும் சுடு தண்ணீரில் ஒரு கை பிடி உப்பு சேர்த்து கொள்ளவும், பின் அந்த கறை உள்ள துணியை அந்த தண்ணீரில் நன்கு ஊறவைத்த பின்னர் குளிக்க பயன்படுத்தப்படும் குளியல் சோப்பு கொண்டு துவைத்தால் அந்த கறை போய்விடும்.

டிப்ஸ் – 03

ஏதேனும் ஒரு நிகழ்விற்காக கைகளில் மருதாணி வைப்பது வழக்கம். சிலர் இரவு நேரங்களில் வைத்து விட்டு அப்படியே தூங்கி விடுவார்கள். தூக்கத்தின் போது தங்களை அறியாமல் அவை துணிகளில் மேல் பட்டுவிடும். அதை நீக்க முடியாது என்றாலும் அவற்றை நீக்க ஒரு வழி உள்ளது. அதாவது நன்றாக காயிச்சிய பாலில் அந்த துணியில் எந்த இடத்தில் கறை உள்ளதோ அதை மட்டும் அந்த பாலில் 20 நிமிடம் ஊற வைத்து பின் அதை தண்ணீரில் அலசி குளியல் சோப்பு கொண்டு துவைத்தால் அந்த மருதாணி கறை நீங்கிவிடும்.

டிப்ஸ் – 04

வீட்டு வேலை என்றால் முதலில் நியாபகத்தில் வருவது சமையல் ஒன்றே, அதில் சமைக்கும் போது அடுப்பிற்கு பின் உள்ள சுவரில் எண்ணெய் பசை பிடித்து கொள்ளும். அதை கவனிக்காமல் விட்டாலும் சில சமயம் வீடு சுத்தம் செய்யும் போது கவனிப்போம் அப்போது அதை நீக்க என்ன செய்வது என தெரியாது. அப்போது பாத்திரம் துலக்கப் பயன்படுத்தும் லிக்விடையை ஒரு ஸ்பூன் தண்ணீரில் கலந்து கொண்டு அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதை அந்த எண்ணெய் பசை உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்து அவற்றை ஒரு துணி கொண்டு துடைத்தால் அது போய்விடும்.

டிப்ஸ் – 05

சமையலுக்கு பயன்படுத்திய பாத்திரங்களை கழுவது வழக்கம். அதற்கு பயன்படுத்தும் தண்ணீர் குழாய்கள் மற்றும் இதை போன்று பாத்ரூமில் பயன்படுத்தும் தண்ணீர் குழாயிகள் மேல் உப்பு கறைகள் படிந்து இருக்கும். அந்த கறையை சுத்தம் செய்வதற்கு லிக்விடை இது போன்ற இடங்களில் ஸ்ப்ரே செய்து விட்டு அவற்றை ஒரு 20 நிமிடம் கழித்து ஒரு ஸ்க்ரப்பரை பயன்படுத்தி கழுவினால் அவை இருந்ததே தெரியாத அளவுக்கு கறை மறைந்துவிடும்.

டிப்ஸ் – 06

நாம் பயன்படுத்தும் பாத்ரூம் மக், பக்கெட் இவற்றில் உள்ள உப்பு கறைகளை எதை போட்டு கழுவினாலும் அவை போகாது. இது போன்ற விடாப்பிடியான கறைகளை சுத்தம் செய்வதற்கு புளித்த தயிருடன் இரண்டு ஸ்பூன் சோடா உப்பை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் ஸ்க்ரப்பரில் அதை கொஞ்சம் தொட்டு அந்த மக் மற்றும் பக்கெட்களில் நன்கு தேய்த்து கழுவினால் அது இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.


RECENT POSTS IN VALAIYITHAL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here