திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் டிசம்பர் 06 ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. டிசம்பர் 27 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இவ்விழாவின், முக்கிய நிகழ்வாக டிசம்பர் 6-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்.
இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்துக்கு ஆன்லைன் மூலமாக அனுமதி சீட்டுகள் இன்று (4ம் தேதி) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
திருவண்ணாமலை கோவிலில் டிச.6-ம் தேதி காலை 6 மணிக்கு பரணி தீபத்தை தரிசிக்க ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், மாலை 6 மணிக்கு மகா தீபத்தை தரிசிக்க ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகள் மற்றும் ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதி வழங்கப்பட்டது. இந்த அணுமதி சீட்டினை சீட்டுகள் https://annamalaiyar.hrce. tn.gov.in என்ற கோயில் இணைய தளம் வழியாக இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டண சீட்டு மட்டுமே வழங்கப்பட்டது. சுமார் ½ மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்து விட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் புக்கிங் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும், ஆன்லைன் மூலம் கட்டண டிக்கெட் பதிவிறக்கம் செய்தவர்கள், பரணி தீப தரிசனத்துக்கு டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை அனுமதிக்கப்படுவர். மகா தீப தரிசனத்துக்கு டிசம்பர் 6 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டண அனுமதி சீட்டு மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன், அம்மணி அம்மன் கோபும் (வடக்கு கோபுரம்) வழியாக குறிப்பிட்ட நேரத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
RECENT POSTS-ன் வலையிதழ்
- இந்தியா முழுவதும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் 11705 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது! Central Govt Jobs 2023
- தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு! Central Govt Jobs 2023
- பல்வேறு காலியிடங்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Central Govt Jobs 2023
- டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை அறிவிப்பு! Tamil Nadu Govt Jobs 2023
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் புதிய வேலை வாய்ப்பு! Tamil Nadu Govt Jobs 2023