நெதர்லாந்து மற்றும் அர்ஜெண்டினா அணியின் சூடு பறக்கும் ஆட்டம்..! இறுதியில் வென்றது யார்?

0
43

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று கத்தாரின் லுசைல் கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதிச்சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜெண்டினா அணி வீரர் மொலினா 35-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில், எந்த அணி வெற்றியை கைபற்ற போகுது என்ற ஆர்வத்தில் இரு அணி ஆட்டக்காரர்களும் கடுமையாக விளையாடினர். இந்த சூழலில் ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் லியோனர் மெஸ்ஸி அணிக்கான 2-வது கோலை பதிவு செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நெதர்லாந்து அணி வீரர் வெக்ஹோர்ஸ்ட் 83 நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து நெதர்லாந்து அணி முன்னிலை வகுத்தது.

இதனை அடுத்து, இரு அணிகளுக்கும் கோல்களை அடிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தது. இரு அணிகளுக்கும் இடையே ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. இரு அணிகளும் சம நிலையில் இருக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை வழங்கப்பட்டது. பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜெண்டினா 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்பை கைபற்றியது. அர்ஜெண்டினா அணியின் சொதப்பலால் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை நழுவவிட்டது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here