ஹாலிவுட் நடிகரான ஜானிடெப் 25 வருடங்களுக்கு பிறகு படம் இயக்குவதாக அறிவிப்பு!

0
107

ஹாலிவுட் நடிகரான ஜானிடெப் தற்போது மீண்டும் படம் இயக்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.

“பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்” படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து, உலகப் புகழ் பெற்ற நடிகராக வளம் வந்தவரே ஜானிடெப். இவர் 2015-ல் நடிகை ஆம்பர் ஹெர்ட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் ஆம்பர் ஹெர்ட் இல்லற வாழ்க்கையில் தன்னை கொடுமைப் படுத்தியதாக ஜானிடெப் மீது குற்றம் சாட்டினார். இதனையடுத்து, இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால் திரைப்பட வாய்ப்புகள் ஜானிடெப்புக்கு குறைந்ததால், ஆம்பர் ஹெர்ட் மீது கோர்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜானிடெப்புக்கு ஆதரவாக கோர்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் ஜானிடெப் படம் இயக்க உள்ளதாக அறிவிப்பு அளித்துள்ளார். இவர் கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்த “தி பிரேவ்” படத்தின் இயக்குனர் ஆவார். தற்போது மீண்டும் 25 வருடங்களுக்கு பிறகு, படம் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் 1884 முதல் 1920 வரை வாழ்ந்த இத்தாலியின் புகழ்பெற்ற ஓவியரும் சிற்பியுமான அமெடியோ மோடிக்லியானியின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க உள்ளார். உலக புகழ் பெற்ற மனிதரான அமேடியோ மோடிக்லியானியின் வாழ்க்கை கதையை படமாக்குவது தனக்கு மகிழ்ச்சியை தருவதாக ஜானிடெப் தெரிவித்துள்ளார்.


RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here