தமிழக மின்சார வாரியத்தின் இரண்டு சூப்பர் திட்டங்கள்! கரண்ட் பில் பத்தி இனிமே கவலையே வேண்டாம்!

தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான மின் இணைப்புகள் உள்ளன. வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் என அனைத்திற்கும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதில் விவசாயிகளுக்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் ஊழியர்களால் அளவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுபோன்று கணக்கீடு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாக தொடர்ந்து மின்வாரியத்துக்கு புகார் எழுந்து வருகிறது. இந்த புகார்களை கட்டுப்படுத்த மின்வாரியத்தின் சார்பில் அனைத்து வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் மின்சாரம் துல்லியமாகப் பதிவு செய்யப்படும். மின் பயன்பாட்டை தானாகவே ‘ஸ்மார்ட்’ மீட்டர் கணக்கெடுத்து அதற்கான கட்டண விவரத்தை sms மூலம் நுகர்வோருக்கு அனுப்பும் புதிய வசதியை விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.

இதையடுத்து, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை போலவே மற்றொரு திட்டத்தையும் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் பெயர் “புளூடூத் ஸ்மார்ட் மீட்டர்”. இதில் ஃபைபர் ஆப்டிக் போர்ட்கள் மூலம் மின் அளவை கணக்கிட்டு சம்பந்தப்பட்ட நுகர்வோர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செல்போன்களுக்கும் தகவல் அனுப்பும் வகையிலான தொழிநுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM