சென்னையில நடக்குற இந்தியா – ஆஸ்திரேலியா போட்டிக்கு இன்னைக்கு டிக்கெட் விற்பனை தொடங்குது! உலகக்கோப்பை : சீக்கிரமா டிக்கெட் வாங்கிடுங்க ப்ரண்ட்ஸ்!

உலக புகழ் பெற்ற விளையாட்டுகளில் ஒன்றான கிரிக்கெட் வருகின்ற அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை ( 50 ஓவர் ) கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருகின்றனர். முதல் லீக் ஆட்டம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கின்றது. அதில் தற்போதைய சாம்பியன் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கின்றன.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகின்ற அக்டோபர் 8-ஆம் தேதி நேருக்கு நேர் விளையாட்டை எதிர்கொள்ள உள்ளனர். இவ்விளையாட்டை நேரில் காண ஆர்வமுள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்கவிருக்கிறது. ‘புக் மை ஷோ’ என்ற இணையதளம் மூலம் இன்று இரவு 8 மணியில் இருந்து ஆன்லைனில் விற்பனை தொடங்கவிருப்பதாக கூறப்படுகின்றன.

hey friends Ticket sales for the India-Australia match in Chennai start today! World Cup Get your tickets soon, friends! dont miss it

மாஸ்டர் கார்டு பயனாளர்களுக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகளின் விற்பனை நேற்றில் இருந்தே தொடங்கப்பட்டது. இதனை அறிந்த மாஸ்டர் கார்டு பயனாளர்கள் டிக்கெட்டுகளை வாங்கி மகிழ்ந்தனர். அனைத்து டிக்கெட்டுகளும் ஒரு மணி நேரத்தில் விற்று முடிந்தன.

இதனை தொடர்ந்து ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கின்ற முதல் லீக் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 3-ஆம் தேதியில் இருந்து விற்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.