அடுத்த 5 நாட்களுக்கு கனமழை | வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

0
17
Today News

அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழையும் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் அலார்ட் கொடுத்துள்ளது. மேலும் எந்தெந்த இடங்களில் மழை பெய்யும் என்பதை குறித்து அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளது, அவை என்ன என்பதை அறிய கீழே தொடர்ந்து படியுங்கள்.

இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழையும், லேசான மழையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவித்துள்ளது. பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

மேலும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனத்த மழை பெய்யும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் மற்றும் நாளை (04.05.2023 / 05.05.2023) இடியுடன் கூடிய மழை, மிதமான மழை ஒரு சில பகுதிகளில் பெய்யும். ஆகவே இன்றும், நாளையும் முன்னெச்சரிக்கையாக இருக்கவும். அதே போல் மே 6ஆம் தேதி மற்றும் மே 7ஆம் தேதியில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை வரும்.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் அடுத்த 24 மணி நேரத்துல காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கான வானிலை அறிவிப்பை முன்கூட்டியே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here