என்னது அடுத்த 2 நாட்களுக்கும் கனமழையா? வானிலை ஆய்வு மையம் தகவல்

0
81

மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. மேலும், கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், டிசம்பர் 10 மதியம் வரை படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழ்நாடு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மலையும் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த புயலால் இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ய்ப்பு உள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here