மாதம் ரூ.1000 உரிமைத்தொகைக்கு நீங்க இன்னும் விண்ணப்பிக்கலையா? இல்ல விண்ணப்பிக்க தவறிட்டீங்களா? கவலை வேண்டாம்…. மீண்டும் ஒரு வாய்ப்பு!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது, பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் அவர்களின் எதிர்காலத்துக்கும் உதவும் வகையில் தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட உள்ள ஒரு திட்டமாகும். இந்த திட்டம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதால் இதற்கான பணிகளை தமிழக அரசு தற்பொழுது தீவிரப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சிறப்பு முகாம் அமைக்கும் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான முதற்கட்ட பணிகள் கடந்த 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்ட பணிகள் வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பம் விண்ணப்பம் பெறாதவர்கள் மற்றும் விண்ணபிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் சிறப்பு முகங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த முகாமின் மூலமாக விண்ணப்பிக்க தவறியவர்கள் ரூ.1000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து பயனடையும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM