நீங்களும் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணபிச்சிருக்கீங்களா? அப்போ உடனே உங்க மொபைல் எடுத்து செக் பண்ணுங்க…

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது வருகிற செப்டம்பர் 15 அண்ணாவின் பிறந்த நாள் அன்று அமல்ப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுமார் 1 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 தமிழக அரசால் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான முதல்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிந்த நிலையில், தற்பொழுது இரண்டாம் கட்ட பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக விண்ணப்பங்கள் வழங்கும் பணி கடந்த ஜூலை 20-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கினார்கள். முதல் கட்ட விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த ஜூலை 24 ஆம் தேதி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது.

இதையடுத்து, இந்த திட்டத்திற்கான இரண்டாம் கட்ட பணிகள் வருகிற 16 ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்தவர்கள் தங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை குறுஞ்செய்தி மூலம்அறிந்து கொள்ளலாம். அதன்படி இதுவரை பதிவு செய்தவர்கள் அவ்வபோது குறுஞ்செய்தி வந்துள்ளதா என்பதை அவ்வபோது சரிபார்த்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM