சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகும் #VaaranamAayiram ஹேஷ்டேக்! ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட வாரணம் ஆயிரம் திரைப்படம்!

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் வாரணம் ஆயிரம் திரைப்படம். கடந்த 2008 ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் சூர்யா நடித்துள்ளார். ஹீரோயினாக சிம்ரன், திவ்யா, சமீரா ரெட்டி ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்த வாரணம் ஆயிரம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படத்தின் பாடல்களுக்கு இன்று வரையுமே ரசிகர்கள் ஏராளாம் எனலாம். முக்கியமாக ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் வந்த ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’, ‘அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல’ பாடல்கள் காதல் மழையில் நனைய வைக்க கூடிய அற்புதமான பாடல்கள்.

வாரணம் ஆயிரம் திரைப்படம் #VaaranamAayiram

Hashtag VaaranamAayiram is trending on social media re-release getting vibe

புதுப்பேட்டை, முத்து, மயக்கம் என்ன, ஆளவந்தான் போன்ற பழைய படங்கள் எல்லாம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து வாரணம் ஆயிரம் திரைப்படம் 15 ஆண்டுகளுக்கு பிறகு முதலில் சென்னையில் மட்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்கள் வரவேற்ப்பு அதிகமாக இருந்ததால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெளியிடப்பட்டது. திரையரங்குகளில் வெளியான நாள் முதற்கொண்டு ரசிகர்கள் வாரணம் ஆயிரம் படத்தை காண ஆர்வமாக செல்கிறார்கள்.

இதில் வரும் பாடல்களுக்கு ரசிகர்கள் வைப் ஆகி… திரையரங்குகளில் இசை காச்சேரியே நடத்தி வருகிறார்கள். இந்த வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரல் வீடியோவாக வலம் வருகிறது. இந்த வீடியோக்களை பார்த்து விட்டு திரையரங்குகளுக்கு படையெடுக்கிறார்கள் ரசிகர்கள்!

நீங்க எப்ப போறீங்க வாரணம் ஆயிரம் படம் பார்க்க?

Scroll to Top