லியோ படத்தில் ஹரோல்ட் தாஸாக தெறிக்கவிடும் ஆக்‌ஷன் கிங்! புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

Cinema News Today 2023

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. இப்படத்தில் அர்ஜூன், மன்சூர் அலிகான், திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோரும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிபானது முழுவது நிறைவடைந்து விட்டது. இதனைத் தொடர்ந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சில தினங்களுக்கு முன்பதாக தான் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டனி தாஸ் க்ளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் படக்குழு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆண்டனி தாஸின் தம்பியாக லியோ படத்தில் ஹரோல்ட் தாஸ் கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் நடித்துள்ளார். ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு அனல் பறக்கும் க்ளிம்ப்ஸ் வீடியோவை லியோ படக்குழு வெளியிட்டுள்ளது. அர்ஜுனின் வெறித்தனமான நடிப்பை பார்த்தால் என்னாது இவருக்கு 62 வயசா ஆகுது என ரசிகர்கள் ஷாக் ஆகி வருகின்றனர்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM