
கல்லும் உடையாமல்
சிலையும் சிதறாமல்
எங்களை செதுக்கிய
சிற்பி அல்லவா நீங்கள்


எத்தனை அன்பு, அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள், ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு…
எங்கள் வாழ்வு வளம் பெறதானே


தன்னில் சிறியவனை
வானளவு உயர்த்தி
பொறாமை கொள்ளாத
ஒரு கடவுள் தான் ஆசிரியர்..!
இனிய ஆசிரியர் தின
நல் வாழ்த்துக்கள்..!


ஆசிரியராக இருப்பது வரம்…
ஆசிரியராக வாழ்வது தவம்…
வரம் பெற்று தவத்தில் வாழும்
என் ஆசிரிய சொந்தங்களுக்கு,
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..!


தன்னை உருக்கி,
உலகிற்கே ஒளியேற்றும்
தீபச்சுடர்கள் நம் ஆசிரியர்கள்!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..!

Happy teachers day 2023 images download | Happy Teachers Day 2023 Status | Happy Teachers Day 2023 Tamil Wishes | Happy Teachers Day 2023 Wishes | Happy Teachers Day in Tamil | Happy Teachers Day quotes in Tamil | Inspirational Teacher Quotes in Tamil | Teacher Quotes in Tamil for Students | Teachers Day Kavithai in Tamil | Teachers Day Wishes in Tamil | Teachers Day Wishes in Tamil Quotes | ஆசிரியர் தின வாழ்த்து அட்டை | ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கவிதை | ஆசிரியர் தினம் | ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள்

மழையின் அருமை தெரியாமல்
மழையை கண்டு ஓடுபவர்போல
உங்களைக் கண்டு ஓடினோம்
மழையின் அருமை
கோடையில் தெரியும்
உங்களின் அருமை, பெருமை
இப்போது உணர்கிறேன் !

மாணவனின் கனவுகளை
கைவசப்படுத்தி கொடுக்க
உதவும் தூண்டுகோலே
சிறந்த ஆசிரியர்…
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..!
உங்களுக்கு பள்ளி பாடத்தை மட்டுமல்ல வாழ்க்கை பாடத்தையும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி… பரிசுகளை கொடுத்து… ஆசிரயர் தினம் 2023 ஐ சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள்..!