நாடு முழுவதும் மே மாதம் 1 (இன்று) உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகத்தில் உள்ள சென்னையில் சிந்தாதிரிப்பேட்டையில் பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு சிவப்பு சட்டை அணிந்து மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திமுகவின் தொ.மு.ச.வை சேர்ந்த நிர்வாகிகளும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
தொழிலார் தினமான இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். பிறகு மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது உரையாடலை தொடங்கிகனார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தொழிலாள தோழர்கள் அனைவருக்கும் எனது மே நாள் நல்வாழ்த்துகள் என தெரிவித்தார். தொழிலாளர்களை வாழ்த்தக் கூடிய அரசாக மட்டுமல்லாமல், அவர்களை வாழ வைக்ககூடிய அரசாகவும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. திமுக அரசு அறிவித்த 12 மணி நேர வேலைக்கான சட்டத்தை திமுக தொழிற்சங்கமே எதிர்த்தது. இச்செயலை நான் பாராட்டுகிறேன். இதுவே திமுக ஜனநாயக இயக்கம் என்பதற்கு ஒரு உதாரணமாக கருதுகிறேன். விட்டுக் கொடுப்பதை நான் அவமானமாவே நினைக்கவில்லை, அதனை என்றும் பெருமையாகவே கருதுகிறேன். அரசு அறிவித்த 12 நேர வேலை சட்டத்தை திரும்ப பெறப்போவதாக கூறிய பின்னரும் பலர் இதனை பற்றி அவதூறு பரப்பினர். செய்தி குறிப்பு வாயிலாக இச்சட்டம் திரும்பப் பெறப்பட்டது என ஏம்.ஏல்,ஏக்களுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு தனது உரையில் முதல் அமைச்சர் தெரிவித்தார்.