ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி! அதிக ரன்கள் குவித்து பென் ஸ்டோக்ஸ் சாதனை…!

Today Sports News 2023

Today Sports News 2023

லண்டன் ஓவலில் நேற்று, பகல்-இரவு மோதலாக 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டனர். இங்கிலாந்து அணி 181 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி ஆட்டத்தின் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், டேவிட் மாலன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஜோடி அதிரடியாக களத்தில் இறங்கி இங்கிலாந்து அணிக்கு தலைமைத் தாங்கியது. குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் தனது முழு திறமையை வெளிப்படுத்தி 76 பந்துகளில் 100 ரன்களை எடுத்து சாதனைப் படைத்தார்.

தனது 4-வது சதத்தை பூர்த்தி செய்த பென் ஸ்டோக்ஸ், தொடர்ந்து அதிக ரன்களை குவித்ததோடு மட்டுமின்றி ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார். இரட்டை செஞ்சுரியை நோக்கி வேகமாக பயணித்த இவர், 45-வது ஓவரில் பென் லிஸ்டர் வீசிய பந்தை வித்தியாசமாக தட்டிவிட்ட போது கேட்ச் ஆகி 182 ரன்களில் (124 பந்து, 15 பவுண்டரி, 9 சிக்சர்) தனது ஆட்டத்தை இழந்தார்.

Also Read >> தாய் தந்தையுடன் தளபதி விஜய்… இணையத்தில் வைரலாகும் க்யூட் போட்டோ…!

ஜாசன் ராய் 2018-ஆம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 180 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் அதை முறியடித்து சாதனை படைத்துள்ளார். இரட்டை செஞ்சுரியை நோக்கி பயணித்த இவர் 182 ரன்களில் ஆட்டத்தை இழந்த போதிலும், ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர்களில் அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.