தமிழக அரசு, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது. இதன் படி, ‘சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படும்’ என தெரிவித்துள்ளது.
பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த சுகாதாரம், கல்வி, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பு போன்ற திட்டங்களை உருவாக்கி, பயனடைய நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நல வாரியத்தின் தலைவராக சமூக நலத்துறை அமைச்சர் செயலாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் “சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரான கீதா ஜீவன்” அவர்களால் 01.09.2021 அன்று தமிழக அரசு சார்பில் இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில்,
“தமிழகத்திலுள்ள முதிர்கன்னிகள், கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் ஆகியோர் எதிர்க்கொள்ளும் பல்வேறு வகையான பிரச்சனைகளை களைத்து, அதற்கான தீர்வு கொடுக்கும் விதமாக, அவர்கள் வாழ்வதற்கு தேவையான தொழிற்பயிற்சிகள் வழங்குதல், வேலைவாய்ப்பு, சுய உதவி குழுக்கள் அமைத்தல், சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்கி, அவர்கள் அனைவரும் சமுதாயத்தில் சிறந்த முறையில் வாழ இந்த “கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்” அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.