தமிழத்தில் இனிமே இவர்களுக்கும் அரசு வேலை..! சற்றுமுன் அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

தமிழக அரசு பொதுமக்களின் நலவாழ்வுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் ஏராளமானோர் போதை பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். இவர்களை அந்த போதை பழக்கத்திலிருந்தும் மது பழக்கத்தில் இருந்தும் மீட்டு மறுவாழ்வு அளிப்பதில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை கண்ணகி நகரில் அமைக்கப்பட்டுள்ள போதை மீட்பு மறுவாழ்வு முகாமை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு, நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதற்கான முறையாக சிகிச்சைகளைப் பெற்று போதைப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு தற்காலிக அரசுப் பணி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM