Gpay, PhonePay யூஸ் பண்றவங்களுக்கு குட் நியூஸ்..! RBI அறிவித்த புதிய அறிவிப்பு!!

இன்றைய காலக்கட்டத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. முன்னதாக கடைக்கு செல்ல வேண்டும் என்றால் கையில் காசு எடுத்துகொண்டு போக வேண்டி இருந்தது. ஆனால், தற்பொழுது அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. கிராமங்களில் உள்ள சிறிய சிறிய கடைகளில் கூட தற்பொழுது டிஜிட்டல் முறை மாறிவிட்டது. இந்த டிஜிட்டல் முறையின் மூலம் தான் தங்களுடைய பணம் பாதுகாக்கப்படுவதாக பலரும் நம்புகின்றனர்.

Good news for Gpay, PhonePay users New notification announced by RBI read it now

இந்நிலையில், ஒவ்வொரு முறையும் நாம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது அதற்கு இணைய வசதி தேவைப்படுகிறது. ஆனால், ஒரு சில இடங்களில் இணைய வசதி சரிவர இல்லாமல் போய்விடுகிறது. இதுபோன்ற சமயங்களில் மக்களுக்கு உதவும் வகையில் UPI லைட் என்ற புதிய அம்சம் வெளியிடப்பட்டது. இந்த புதிய அம்சம் மூலம் இணைய வசதி இல்லாமலேயே ஆதாவது ஆப்லைன் வாயிலாக ரூ.200 வரை பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தற்பொழுது ஆப்லைன் மூலம் பணபரிவர்த்தனை செய்யும் தொகையானது மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, UPI லைட் வசதி மூலம் ஆஃப்லைன் வாயிலாக பண பரிமாற்றம் செய்யும் தொகையானது ரூ.200 லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி(RBI ) அறிவித்துள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM