குட் நியூஸ்! ரேஷன் அட்டை இருக்கா உங்களுக்கு? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்…!

0
27
Today News in Tamilnadu

ரேஷன் கடைகளிலே நம்முடைய அத்தியாவசியமான அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் எண்ணை, மண்ணெண்ணெய், போன்ற பொருட்களை மிக குறைந்த விலையில் தமிழக அரசு விநியோகம் செய்து வருகிறது. அதனை வாங்கி நாம் பயன்படுத்திக்கொள்ளுகிறோம்.

மேலும் ரேஷன் கடையிலே தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விரைவில் செறிவூட்டப்பட்ட அரிசியும் இனி வாங்கிடலாம் என தெரிவித்துள்ளது. இது மிக சத்து நிறைந்த அரிசி ஆகும். இதனை நாம் சாப்பிடுவதால் உடலில் ஏற்ப்படும் ரத்தசோகை வராது. மேலும் இந்த அரிசியில் வைட்டமின் B 12 சத்து இருப்பதால் நரம்பு மண்டலத்தை சீராக செயல்படுத்த உதவுகிறது. இதனால், மற்ற பொருட்களுடன் இனி ரேஷன் கடையில் கேழ்வரகும் வாங்கிடலாம் என்று தமிழக உணவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் தமிழக உணவுத்துறை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். அதில் அவர், நடப்பு ஆண்டு உலக அளவில் சிறு தானிய ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும், இதனால் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக ரேஷன் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு கேழ்வரகு, கம்பு, சோளம் போன்றவை விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். அத்துடன் இதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here