Today Gas Cylinder Price
ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு மற்றும் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை எண்ணை நிறுவனகள் தான் நிர்ணயிக்கிறது. இந்நிலையில் இந்த மாதத்திற்க்கான புதிய விலையை அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியான வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.157.50 குறைத்து அறிவித்து உள்ளது.
இந்நிலையில், 19 கிலோ எடை கொண்ட வணிக கேஸ் சிலிண்டர் ரூ.1,852.50-யில் இருந்து ரூ1,695க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்தில் ரூ.93 மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.92.50 என்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்த நிலையில் தற்போது ரூபாய் 157.50 குறைந்து உள்ளது.
Also Read>> தமிழகத்தில் இரவோடு இரவாக அமலுக்கு வந்தது சுங்கக்கட்டணம்
மேலும், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டு ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.கேஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து விரைவில் பெட்ரோல், டீசல் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.