மீண்டும் உச்சத்தை தொடும் தங்கம்..! இன்று தங்கம் விலை என்னென்னு தெரியுமா?

0
49

கடந்த இரண்டு நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் உயர்ந்து, மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. இது நடுத்தரக் குடும்பத்தினருக்கும், நகைப்பிரியர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 24 ரூபாயும், சவரனுக்கு 192 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,023ஆகவும், சவரன், ரூ.40,184ஆகவும் இருந்தது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்து ரூ.5,047 ஆகவும், சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 376ஆக ஏற்றம் கண்டது.

அதேபோல், வெள்ளியின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இன்று நிலவரப்படி, வெள்ளி கிராம் ஒன்றுக்கு 1.20 பைசா அதிகரித்து, ரூ.72.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.1,200 உயர்ந்து, ரூ.72,500 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, தங்கம் விலை இந்த வாரம் தொடங்கியதில் இருந்தே கடும் உச்சத்தில் இருந்து வருகிறது. தங்கத்தின் விலை உயர்வால் நடுத்தரக் குடும்பத்தினருக்கும், தங்கம் வாங்க நினைப்போருக்கும் மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here