கோடை வெயிலில் தவிக்கும் விலங்குகளுக்கு குடிக்க தண்ணீர் வையுங்க – பிரபல நடிகை செய்த செயல்…!

0
19
கோடை வெயிலில் தவிக்கும் விலங்குகளுக்கு குடிக்க தண்ணீர் வையுங்க - பிரபல நடிகை செய்த செயல்...!

இந்தி திரையுலகத்தில் பிரபலமான நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் இலகையின் முன்னால் அழகுரானியுமாவார். தற்போது பல இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த கோடைக்கலத்தை நம்மாலேயே தாக்கு பிடிக்க முடியவில்லை, பாவம் அந்த வாயில்லா உயிரினங்கள் என்ன செய்யும், இந்நிலையில் இவர் பறவைகள், விலங்குகள், பிராணிகளின் தாகத்தை தீர்க்க, கிண்ணங்கள் அல்லது மண் பத்திரங்களில் தண்ணிரை நிரப்பி வைக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அவர் ஒரு சின்ன தொட்டியில் தண்ணீரை நிரப்பி வைத்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். வெயில் காலத்தில் விலங்குகள், பறவைகளுக்காக உங்களுடைய வீடுகளுக்கு முன்னால் மண் கலயங்களில் நீரை நிரப்பி வையுங்கள். நீரை தேங்க விடாமல் ஒவ்வொரு நாளும் புதிய நீரை நிரப்பி வையுங்கள். இதானால் கோடைக்காலத்தில் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் விலங்குகள், பறவைகள், பிராணிகளுக்கு இது உதவும் என கூறியுள்ளார்.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here