தமிழகத்தில் கொட்ட போகும் பேய் மழை..! தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு

0
52

வங்கக்கடலில் உருவான மாண்டஸ்’ புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த புயல் காரணமாக இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மாமல்லபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது.

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காற்றின் வேகம் 55 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளதால் மாமல்லபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும், மிதவை படகு, மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், கயிறு, மர அறுவை இயந்திரங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here