உலகளவிலான பணக்காரர்கள் பட்டியலில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தொடந்து முதல் இடத்தை வகிக்கிறார். அதே போல், இரண்டாவது இடத்தில் ‘அதானி’ குழுமத்தினுடைய தலைவரான கவுதம் அதானி முன்னேறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகின் பெரிய பணக்காரர்கள் வரிசையில் 3-வது இடத்தை பிடித்த கவுதம் அதானி, இந்தியாவில் பெரும் பணக்காரர் ஆவார்.
உலகின் முதல் 3 இடத்திற்கும் வந்த முதல் நபர் என்கின்ற பெருமையை ஆசியாவிலேயே கவுதம் அதானி தான் பெற்றுள்ளார். அதானி போர்ட், அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி என்டர்பிரைசஸ் போன்ற பங்குகள் தற்போது, அதானி குழும பங்குகளாகும். இவை தற்போது தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகின்றன. இதன் காரணமாக, அதானியினுடைய சொத்து மதிப்பும் அதிகமாகி வருகின்றது.
கவுதம் அதானியின் தற்போதைய நிகர சொத்து மதிப்பானது 2022- ன் படி, 70 பில்லியன் டாலர் அளவிற்கு அதிகரித்து உள்ளது. கவுதம் அதானியின் நிகர மதிப்பு 155.7 பில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது என போர்ப்ஸ்-ன் ரியல் டைம் அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால், உலகின் மிக பெரிய பணக்காரர் வரிசையில் 2-வது இடத்தை பெற்ற கவுதம் அதானி, ‘அமேசான்‘ நிறுவனரான ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
2- ஆம் இடத்தை பிடித்த கவுதம் அதானியின் இன்றைய சொத்து மதிப்பு ரூ. 12 லட்சத்து 45 ஆயிரம் கோடி என்றும், தொடர்ந்து முதல் இடத்தை பிடித்து வரும் டெஸ்டா நிறுவனரான எலான் மஸ்கினுடைய சொத்து மதிப்பு ரூ.21.88 லட்சம் கோடி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.