விநாயகர் சதுர்த்தி 2023 | சுவையான கார கொழுக்கட்டை செய்வது எப்படி? – Kara Kozhukattai Recipe in Tamil

கார கொழுக்கட்டை, விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகருக்கு படைக்கப்படும் ஒரு கார வகையாகும். விநாயகருக்கு பிடித்தமான உணவு வகைகளில் கொழுக்கட்டையும் ஒன்றாகும். ஆவியில் வேக வைத்து சிற்றுண்டியாக உண்ண கூடிய ஒரு சுவையான மற்றும் சத்தான உணவாக கார கொழுக்கட்டை உள்ளது. இதை காலை நேரத்தில் டிபன்-க்கு பதிலாக தேங்காய் சட்னியுடன் எடுத்துக் கொள்வது ஆரோகியத்திற்க்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது. இவற்றை தமிழ் மக்கள் ‘கார கடுபு’ என்றும் அழைப்பர். ஏனெனில் ஆவியில் வேக வைப்பதால், இது கொழுப்பு சத்து இல்லாதது. இந்த வகையான கொழுக்கட்டை கர்நாடகவில் அதிகம் தயாரிக்கப்படுகிறது. இதை நாட்டு மக்கள் அனைவரும் படையலாக வைத்து விநாயகரை வழிபடுகின்றனர். வருகின்ற விநாயகர் சதுர்த்தியின் போது நீங்களும் கார கொழுக்கட்டை செய்து, இறைவனுக்கு படைத்தும் சுவைத்தும் மகிழுங்கள்.

சுவையான கார கொழுக்கட்டை செய்வது எப்படி?

Kara Kozhukattai Recipe in Tamil

Kara Kozhukattai Recipe in Tamil

தேவையான பொருட்கள் :

பச்சரிசி மாவு – 1 கப்
துருவிய தேங்காய் – 1 கப்
உப்பு, கடுகு – தேவையான அளவு
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 4
எண்ணெய், கருவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை :

  1. ஒரு பாத்திரத்தில் 1 கப் பச்சரிசி மாவை எடுத்து கொள்ளவும்.
  2. அதில் தேவையான அளவு உப்பு மற்றும் வெது வெதுப்பான நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  3. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு சேர்க்க வேண்டும்.
  4. கடுகு பொறிந்தவுடன் உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாக வதக்கவும் .
  5. பொன்னிறமாக வதங்கியவுடன் காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து கிளறவும்.
  6. பின் அடுப்பை அணைத்து விட்டு, அவற்றை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
  7. சூடு ஆறிய பிறகு, அதில் துருவிய தேங்காய் மற்றும் பிசைந்து வைத்த மாவை சேர்க்கவும்.
  8. அனைத்தையும் ஒன்றாக நன்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  9. ஒரு இட்லி பாத்திரத்தை எடுத்து, அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  10. தண்ணீர் கொதித்தவுடன் இட்லி தட்டில், பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை எடுத்து வைத்து இட்லி பாத்திரத்தை மூடவும்.
  11. 7-8 நிமிடம் இட்லி பாத்திரத்தில் உள்ள கொழுகட்டைகளை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  12. இப்பொழுது அனைவரும் விரும்பி உண்ண கூடிய மிகவும் சுவையான கார கொழுக்கட்டை தயார்.