
Vinayagar Chaturthi 2023
நாம் ஒரு நற்செயல்களை தொடங்குவதற்கு முன்பு, முதலில் விநாயக பெருமாளை வழிபட்டு விட்டு தான் செய்ய தொடங்குகிறோம். ஏனெனில் அவரை உலக மக்கள் அனைவரும் முழு முதற்கடவுளாக போற்றுகின்றனர். விநாயகர் வழிபாடு உலக நாடுகள் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் இந்தியா மற்றும் நேப்பாளத்தில் விநாயகர் வழிபாடு அதிக அளவில் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி உலக மக்கள் அனைவரும் விநாயகரை கணபதி, ஆனைமுகன், சர்வாயுதர், கணேஷா, கபிலர் என பல்வேறு பெயர்களில் வணங்குகின்றனர். இந்துக்கள் முதலில், ‘ஓம் கணேசாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வழிபட்ட பின்னரே, அனைத்து நல்ல காரியங்களையும் துவங்குகின்றனர். இவரை ‘வினை தீர்க்கும் விநாயகர்’ என்றும் போற்றுகின்றனர்.
விநாயகர் பிறப்பு

கைலாயத்தில் இருந்து ஈசன் வெளியே சென்ற பிறகு, அவரது துணைவியாகிய பார்வதி தேவி நீராட சென்றார். நீராட சென்ற பார்வதி தேவி தனது பாதுகாப்பிற்காக நந்தி கணத்தை காவலுக்கு நிறுத்தினார். சிறிது நேரத்திற்கு பிறகு வெளியில் சென்ற ஈசன் கைலாயத்திற்கு திரும்பினார். அந்த சமயம் கைலாயத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்த நந்தி, பார்வதி தேவி நீராட சென்றுள்ளதையும் உள்ளே யாரையும் அனுமதிக்காதே என்று அவர் தனக்கு கட்டளை விடுத்துள்ளார் என்பதையும் தெரிவித்து, உள்ளே செல்ல வேண்டாம் என்று ஈசனை கேட்டு கொண்டார்.
ஆனால் ஈசன், அவள் என்னுடைய துணைவி ஆகையால் இந்த கட்டளை என்னை தடுக்காது என்று கூறி கைலாயத்திற்கு உள்ளே சென்றார். கைலாயத்திற்கு உள்ளே ஈசனை பார்த்த தேவி பார்வதி நந்தியின் செயலால் மிகுந்த கோவமடைந்தார். இருப்பினும் நந்தி அவர்கள் செய்ததில் தவறு ஏதும் இல்லை என்று எண்ணினார். ஆனால் பாதுகாவலனாக ஒருவன் பொறுப்பு ஏற்கும் போது யாரையும் உள்ளே விடாதபடி அறிவாளியாகவும், பலசாலியாகவும் இருக்க வேண்டும் என பார்வதி தேவி நினைத்தார்.
இதை எண்ணியபடியே நீராடிய தேவி பார்வதி தான் பூசிக் கொண்டிருந்த மஞ்சளையும் சந்தனத்தையும் பிடித்து ஒரு உருவமாக்கி அதற்கு உயிரையும் கொடுத்தார். உயிர் பெற்ற அந்த உருவமே தற்போது அனைவராலும் வழிபட கூடிய விநாயக பெருமாள் ஆவார்.
ஆனைமுக விநாயகர்

பார்வதி தேவி, ஒரு நாள் விநாயக பெருமாளை காவலுக்கு நிறுத்திவிட்டு நீராட சென்றிருந்தார். அப்பொழுது கைலாயத்திற்கு வந்த சிவபெருமானை தடுத்து உள்ளே செல்ல அனுமதி இல்லை, பார்வதி தேவி அன்னையார் நீராடுகிறார் என்று கூறினார். ஆனால் ஈசனோ அன்று உரைத்த அதே வசனங்களை கூறி உள்ளே செல்ல முயன்றார். ஆனால் ஈசனை, கைலாயத்திற்குள்ளே செல்ல விநாயக பெருமாள் அனுமதிக்கவில்லை. இதனால் கோவமடைந்த ஈசன், அங்கிருந்த கனங்களை வரவழைத்து அவ்விடத்தில் இருந்து விநாயக பெருமாளை அகற்றும்படி கூறினார். ஆனால் கணபதியோ யாரையும் உள்ளே அனுமதிக்காததோடு, எதிர்த்து சண்டையிட்டு அவர்களை அங்கிருந்தும் விரட்டினார்.
கனங்களை விரட்டியடித்த செய்தியை பற்றி அறிந்த ஈசன், அங்கு வந்து தனது சூலாயுதத்தால் விநாயக பெருமாளின் தலையைக் கொய்தார். கணபதியின் அலறல் சப்தத்தைக் கேட்டு பார்வதி தேவி அவ்விடத்திற்கு வந்தார். அங்கு நடந்திருந்த செயலைக் கண்டு ஈசனிடம், கணபதி நான் உருவாக்கிய மகனாவான் இப்படி செய்துவிட்டீர்களே? என்றார். மீண்டும் அவருக்கு உயிர் அளிக்குமாறு ஈசனிடம் கேட்டுக்கொண்டார். விநாயகருக்கு உயிரளிக்கும் பொறுப்பு எனது என்று பார்வதி தேவியிடம் ஈசன் கூறினார். வடக்கில் தலை வைத்து படுத்திருக்கும் ஒரு பிள்ளையும், அவரின் தான் வேறொரு திசையைப் பார்த்து படுத்திருக்குமாறு இருக்கும் தலையை எடுத்து கணபதிக்கு பொருத்தினால் உயிர் தந்து விடலாம் என்று அனைவரையும் படைக்கும் கடவுளான பிரம்ம தேவன் ஆலோசனை கூறினார்.
கனங்கள் ஈசனின் கட்டளைகிணங்க, பல இடங்களில் தேடி அலைந்து ஒரு யானைக்குட்டியின் தலையை எடுத்து வந்தனர். அவர்கள் எடுத்து வந்த யானையின் தலையை சிவபெருமான், விநாயக பெருமாளுக்கு பொருத்தி உயிர் கொடுத்தார். மனித உடலை கொண்ட கணபதிக்கு இப்படி யானை முகம் பொருத்திவிட்டீர்களே சுவாமி என தேவி பார்வதி கேட்டார். ‘கஜமுகாசுரன் என்னும் அரக்கன் உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் துன்புறுத்தி வருகிறார். இவரை அழிக்க வேண்டும் என்றால், ஆண், பெண் இல்லாமல் பிறக்கும் ஒருவரால் மட்டுமே முடியும்’ என்று ஈசன் கூறினார். கஜமுகாசுரனை அளிப்பதற்காகவே உலகில் விநாயக பெருமாள் அவதரித்துள்ளார் என்றும் கூறினார்.
விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் அவதரித்த நாளையே உலக மக்கள் அனைவரும் ‘விநாயகர் சதுர்த்தி’ விழாவாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நாளில், இந்துக்களால் மிகவும் உற்சாகமுடன் இப்பண்டிகைக் கொண்டாடப்பட்டு வருகிறது. மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் ஆட்சி காலத்திலேயே ‘விநாயகர் சதுர்த்தி’ விழா கொண்டாடப்பட்டு இருந்தது. இருப்பினும், தற்போது மிக பிரமாண்டமாக அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிற விநாயகர் சத்திரத்தி விழாவிற்கு, பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவரான பாலகங்காதர திலகர் ஆவார்.
1893-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை, பாலகங்காதர திலகர் “சர்வஜன கனேஷ் உத்சவ்” என்ற பெயரில் தொடங்கி வைத்தார். அன்று முதல் உலக மக்கள் அனைவராலும் விநாயகர் சதுர்த்தி மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரெங்கும் , விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பந்தல்களை அமைத்து, அதில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்கின்றனர். மண்ணால் நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து 70 அடி வரை பல விதங்களில் செய்யப்படுகின்றன. சிலர் வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்கி பூஜை அறையில் வைத்து, கொழுக்கட்டை, பொங்கல், சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை படைத்து பூஜை செய்கின்றனர். விநாயகருக்கு மிகவும் பிடித்தத்தில் கொழுக்கட்டையும் ஒன்றாகும். ‘விநாயகர் சதுர்த்தி’ விழாவில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்த பின்னர், 3-வது அல்லது 5-வது நாள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கமாகும்.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் 10 நாட்கள் வரை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி நேபாளம், அமெரிக்கா, மொரீசியஸ் போன்ற பல்வேறு நாடுகளிலும் இப்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கணபதியும், உணவு வகைகளும் (Ganesh Chaturthi)

விநாயகருக்கு, வேகவைத்த உருண்டை வகை உணவுகள் மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் ஒன்றாகும். இந்த உணவு அரிசி மாவு கேக்குகள், இனிப்பு அல்லது காரங்களை நிரப்பி வேகவைத்து தயாரிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அனைவரும் வீட்டில் வேகவைத்த உணவுகளை தயாரித்து கணபதிக்கு படைக்கின்றனர். அவரது பிறந்தநாளில், அவருக்கு வழங்குவதற்கான சரியான உணவாகவும் இது கருதப்படுகிறது.
இதனையெடுத்து அவருக்கு பிடித்த உணவாக பூரணப் போலி உள்ளது. இது ரொட்டி அல்லது கோதுமை மாவில் வெல்லம் மற்றும் தேங்காய் ஆகியவற்றை நிரப்பி செய்யப்பட்ட ஒரு இனிப்பு வகை உணவாகும். மகாராஷ்டிராவில் இந்தவகை உணவு அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து லட்டு, பேடா, பஃப்டு ரைஸ், வாழைப்பழங்கள், ஜுங்கா, ஸ்ரீகண்ட், மெதுவடை, பாயாசம் ஆகிய உணவு வகைகளும் விநாயகருக்கு பிடித்த உணவு வகைகளாகும். விநாயக சதுர்த்தி விழாவின் போது இத்தகைய உணவு வகைகளை விநாயகருக்கு படைத்து, பக்தர்கள் விநாயகரை வழிபட்டு வருகின்றனர்.