இனிமே எல்லா பெண்களும் 8 குழந்தைங்கள பெத்துக்கணும்! அதிபர் சொன்ன காரணம்! ஓ இது தான் விஷயமா?

இனிமே எல்லா பெண்களும் 8 குழந்தைங்கள பெத்துக்கணும்! அதிபர் சொன்ன காரணம்! ஓ இது தான் விஷயமா?
இனிமே எல்லா பெண்களும் 8 குழந்தைங்கள பெத்துக்கணும்! அதிபர் சொன்ன காரணம்! ஓ இது தான் விஷயமா?

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடந்த ரஷ்யா-உக்ரைன் போர் காரணத்தினால் ரஷ்யா பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அதாவது பொருளாதார சிக்கல் மற்றும் ஏராளமானோர் உயிரிழப்பு என பல்வேறு இன்னல்களில் சிக்கியுள்ளது. இந்நிலையில், ரஷ்ய தலைநகரில் உலக மக்கள் கவுன்சிலில் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டின் அதிபர் புதின் கலந்துகொண்டார். அதில் அவர் பேசிய பேச்சு தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அப்படி என்னதான் அதிபர் புதின் பேசியிருப்பார்? அதோடு அவர் அதற்கான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார். அதாவது, இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் 8 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இது வருங்காலத்தில் ரஷ்யாவின் மக்கள் தொகையை அதிகரிப்பது தான் தங்களது இலக்கு எனவும் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே குழந்தை பிறப்பு வீதம் என்பது கடந்த 1990 ஆண்டு முதலே மக்கள் தொகை சரிந்து வருகிறது. தற்போது, உக்ரைன் போர் நிமித்தமாக பல ஆயிரக்கணக்கான பேர் இறந்துவிட்டனர். இதனால் ரஷ்ய மக்கள்த்தொகை கடுமையா சரிந்து வரும் நிலை உருவாகிறது என அதிபர் பேசினார்.

Also Read >> #VJS51 – விஜய் சேதுபதியின் 51வது படப்பிடிப்பு முடிந்துவிட்டது! Title & First Look Soon

மேலும், இது குறித்து அவர் கூறுகையில், நமது நாட்டில் பாரம்பரியமாக ஒவ்வொரு குடும்பத்திலும் நான்கு அல்லது ஐந்து இல்லையென்றால் அதற்கு மேல் தான் குழுந்தைகள் இருக்கும். அதிலும், குறிப்பாக நமது பாட்டிமார்கள் ஏழு, எட்டு என்ற கணக்கில் குழந்தைகளை பெற்றனர். இது நன்றாகவே நம் எல்லோருக்கும் தெரியும். இந்த சிறந்த பாரம்பரியத்தை தான் இப்போது நாம் பாதுகாக்க வேண்டும். அதுமட்டுமில்லை, அதற்கு நாம் புத்துயிர் கொடுக்க வேண்டும்.

ஒரு குடும்பம் என்பது அரசாங்கம் மற்றும் சமூகத்தின் அடித்தளம் மட்டுமல்ல, அதில் ஒரு ஆன்மீக தொடர்பும் இருக்கிறது. அது தான் நம் ஒழுக்கத்தின் ஆதாரமாகும். அடுத்து ரஷ்யாவின் மக்கள் தொகையை அதிகரிப்பதும், பாதுகாப்பதும் தான் எங்களுடைய அடுத்து வரும் காலத்தின் இலக்காகும். பல்லாயிரம் ஆண்டுகள் நிறைந்த பழமையான ரஷ்யாவின் எதிர்காலமே இதில் தான் அடங்கி உள்ளது என புதின் கூறியுள்ளார்.

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top