பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் : ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

0
57

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருந்தார். அந்த வகையில், 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியை கைபற்றியது.

இந்நிலையில், திமுக அணியின் தலைவர் மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற முதல் நாளே பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற திட்டத்திற்க்கான கோப்பில் கையெழுத்திட்டார். இந்த திட்டம் 2021 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்தத் திட்டம் தற்போது சிறப்பாக நடைமுறையில் இருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா பயணம் திட்டத்தின் கீழ் கடந்த அக்டோபர் 5ம் தேதி வரை 176.84 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் நாள் ஒன்று சராசரியாக 39.21 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த இலவசப் பேருந்து பயணம் மூலம் பெண்களுக்கு, ஒரு மாதத்திற்கு சராசரியாக 888 ரூபாய் மிச்சம் ஆவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் தொடர்பாக மாநில திட்டக்குழு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here