மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க மறந்துட்டீங்களா? கவலை வேண்டாம்… மீண்டும் ஒரு வாய்ப்பு!!

தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களின் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழக அரசால் செயல்படுத்தப்பட உள்ள ஒரு திட்டம் தான் “மகளிர் உரிமைத்தொகை” திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டமானது அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதற்கான பணிகள் தற்பொழுது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணபிக்க மக்கள் சிரமப்படுவதை தடுக்க அந்தந்த ஊரிலேயே சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமானது ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட சிறப்பு முகாமானது ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது. இந்த இரண்டு கட்ட முகாமிலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM