சூப்பர் ஸ்டார் ரஜினிக்காகவும், என் குடும்பத்திற்காகவும் எழுதிய முதல் பாடல்! விக்னேஷ் சிவன்…

Today Cinema News 2023

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்தது.

இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ஜெயிலர் படத்தின் அனைத்து பாடல்களும் இடம் பெற்றது. நேற்றைய தினத்தில் ரத்தமாரே என்ற பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்திலே 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

மேலும், ஜெயிலர் படத்தில் வரும் ரத்தமாரே என்ற பாடலை பிரபல இயக்குநரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக முதல் பாடலை எழுதியுள்ளேன். இதுவே எனது குழந்தைகளுக்கும், குடும்பத்திற்குமான முதல் பாடலும் ஆகும். இயக்குநர் நெல்சன் மற்றும் அனிருத்திற்கு நன்றி என இவ்வாறு தெரிவித்தார்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM