பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ஒரு திட்டம் தான் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர பெண்கள் மிகவும் பயனடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்பொழுது தமிழக அரசு போக்குவரத்து கழகமானது பொதுமக்களின் வசதிக்காக மீண்டும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டம் வால்பாறை வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Also Read : ஒரே ஒரு வீடியோதான் 10 லட்சம் பாலோயர்கள்… இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகும் நயன்தாராவின் வீடியோ..!
அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திருப்பூர், கோவை, சேலம் மற்றும் கேரள மாநிலம் மன்னார்காடு உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளில் ரூ.64 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது ரூ.48 கட்டணமாக வசூலிக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.