ரசிகர்களே சீக்கிரம் ரெடியாகுங்க… “டிமாண்டி காலணி 2” படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு!

கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் அருள்நிதியின் நடிப்பில் வெளியான ஒரு ஹாரர் படம் தான் “டிமாண்டி காலணி”. இந்த படம் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்றது. இந்த படத்தில் வரும் ஒவ்வொரு சீனும் பார்ப்போரை பயமுடுத்தும் அளவிற்கு இருந்தது. இந்த பலகோடி வசூலை அள்ளி வெற்றி பெற்றது. டிமாண்டி காலணி படத்தின் வெற்றியை தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பின் “டிமாண்டி காலணி 2” திரைப்படம் உருவாகியுள்ளது.

Fans get ready soon Demandi Kalani 2 movie major update release just now read it

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் “டிமாண்டி காலணி 2” திரைப்படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் ஆன்ட்டி ஜாஸ்கெலைன், டிசேரிங் டோர்ஜோ, அருண் பாண்டியன், முத்துகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனா காலிட், விஜே அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வித்தியாசமான ஹாரர் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, “டிமாண்டி காலணி 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM