பெரும்பாலும் கோடை வெயிலின் தாக்கத்தால் தோலின் நிறம் நாளுக்கு நாள் மாறி, கருமையாகி வருவதை பார்த்திருப்போம். நமக்கு தேவையான வைட்டமின் D வெயிலில் இருந்து கிடைப்பதால், காலை வெயிலும் மாலை வெயிலும் நல்லதுதான்.
சரும நிறம் பற்றிய கவலை நிச்சயமாக ஆண்களை காட்டிலும் பெண்களுக்குத்தான் அதிகம் உள்ளது. மேலும் சருமத்தின் பாதுகாப்பிற்காக, தோலின் பராமரிப்பு பற்றிய செய்திகளை அறிந்துகொண்டு அதற்கு அதிக முக்கியத்துவம் பெண்கள்தான் கொடுக்கிறார்கள்.
தோலின் பளபளப்பிற்காவும் சருமத்தின் வெண்மை நிறத்திற்காகவும் பற்பல இரசாயனம் கலந்த பொருட்களை பலரும் இன்றைய சூழ்நிலையில் பயன்படுத்தி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் சருமத்தை பளபளப்பாக வைப்பது போன்று தோன்றினாலும், இது நிச்சயமாக நிரந்தர தீர்வினை தராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இயற்கையை கொண்டு சரும பிரச்சனைகள் அனைத்திற்கும் நிரந்தரமான தீர்வினை பெற முடியும் என்பதால், சருமத்தின் நிறத்தை எளிமையான முறையில் அதிகரிக்க கூடிய இயற்கை முறைகளை கொண்டு சரியான தீர்வினை பெற முடியும்.
இயற்கையான முறையில் முக அழகிற்கான 10 அழகுக் குறிப்புகள்
1. எண்ணெய்ப் பசையை நீக்க – தக்காளி, பால்:

- முதலில் தக்காளியை தோல் நீக்கி, பால் சேர்த்து பேஸ்ட் போல நன்கு அரைத்து கொள்ளவும்.
- பிறகு முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவிட முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவு பெறும்.
2. முகத்தின் நிறம் அதிகரிக்க – எலுமிச்சை, தேன், தயிர்:

- தேனில் சிறிது எலுமிச்சை சாருடன் தயிரையும் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவிட வேண்டும்.
- இப்படி செய்வதால், சருமம் ஆரோக்கியமாகவும் பளிச்சென்றும் மாறும். இதை இரண்டு நாட்கள் தொடர்ந்து செய்தாலே முகத்தின் நிறம் அதிகரிப்பதை காணலாம்.
3. சருமம் பொலிவு பெற – சர்க்கரை, எலுமிச்சை :

- எலுமிச்சை சாருடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து, சருமத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
- இதனால், சருமத்திலுள்ள இறந்த செல்கள் மற்றும் சரும துளைகளிலுள்ள அழுக்குகள் நீங்கி, சருமமானது பொலிவு பெறும்.
4. முகத்தழும்புகள் நீங்கிட – தேங்காய் தண்ணீர்:

- தேங்காய் தண்ணீரை கொண்டு தினசரி இரண்டு முறை முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
- பிறகு 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கழுவினால், தழும்புகள் உட்பட முகத்திலுள்ள கருமை அனைத்தும் நீங்கி, முகம் பளிச்சென்று மாறும்.
5. சருமத்தின் அழகு அதிகரிக்க – தண்ணீர்:

- சருமத்திலுள்ள புரதம் மற்றும் நீர்ச்சத்து இணைந்து, எலாஸ்டிக் மற்றும் உறுதித்தன்மையை கொடுக்கிறது.
- நமது சருமத்தில் பெருமளவு நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 2-3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நன்மையை தரும்.
6. வறட்சியை போக்க – உருளைக்கிழங்கு:

- வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதனுடன் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல செய்துகொள்ள வேண்டும்.
- பிறகு, முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து கழுவ வேண்டும். இது, சருமத்திலுள்ள அதிகப்படியான வறட்சியை போக்கும்.
7. சருமம் பளிச்சென்று மாற – தக்காளி, சர்க்கரை:

- 1 ஸ்பூன் தக்காளி சாறுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து, 15 நிமிடங்கள் வரை வைத்து கழுவி விடவும்.
- தக்காளியில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் C அதிகமாக உள்ளது. இதனால், தோலின் நிறம் பாதுகாக்கப்படும்.
8. அழகை அதிகரிக்க – ரோஸ் வாட்டர்:

- உறங்கும் முன் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து முகத்தில் பயன்படுத்துவதால், சருமம் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
- ரோஸ் வாட்டரில் உள்ள ஆன்டி-பாக்டீரியா சருமத்தை பொலிவுடன் வைத்துகொள்ள உதவுகிறது.
9. கரும்புள்ளிகளை போக்க – ஆலிவ் எண்ணெய்:

- ஆலிவ் எண்ணெயை தவறாமல் முகத்திற்கு தடவி, மசாஜ் செய்வதன் மூலம் முகத்திலுள்ள கருமைகளை நீக்கலாம்.
- இவ்வாறு மசாஜ் செய்வதால் வடுக்கள் மற்றும் பருக்களின் அடையாளங்களை மறைக்க முடியும்.
10. முகப் பொலிவிற்கு – குங்குமப்பூ, பால்:

- குங்குமப்பூவை பாலில் நன்றாக ஊற வைத்து, முகத்திற்கு பூசி காய்ந்தவுடன் கழுவி விடவும்.
- பால் சருமத்தை சுத்தமாக்கி பொலிவு பெற செய்யும். வெண்மையான சருமத்திற்கு குங்குமப்பூ மிகவும் பயன்படுகிறது.