சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…! செலுத்தாதவர்களுக்கு இத்தனை சதவீத வட்டியா? சென்னை மாநகராட்சி அறிவிப்பு

0
48

சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு சொத்து வரியில் 5 சதவீதம் அதாவது அதிகபட்சம் ரூ. 5,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

இதனை தொடர்ந்து, 2022-23-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி சீராய்வின்படி, சொத்து உரிமையாளர்களால் 1.10.22 முதல் சொத்து வரியை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் சொத்து வரியினை இதுநாள்வரை செலுத்தாதவர்கள், வட்டி இல்லாமல் செலுத்த டிசம்பர் 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சொத்துவரி சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியினை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை தனி வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு 15.11.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியினை 5 லட்சத்து 92 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் செலுத்தி உள்ளனர்.

எனவே, சொத்து வரியை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி டிசம்பர் 15ஆம் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தி 2 சதவீத தனி வட்டியினை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here