மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

0
61

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆண்டுதோறும் டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுவது வழக்கம். எல்லா இடங்களிலும் அவர்களுக்கு சம உரிமை வழங்குவதற்கான சுழலை ஏற்படுத்தி அவர்களிக்கு உரிய வாய்ப்பினை வழங்க அனைவரும் உறுதி மேற்கொள்ள வேண்டும். மேலும், இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக போதுமான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்தும் விதமாக இந்த நாள் அமைந்துள்ளது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் விழாக்கள் நடத்தப்பட்டும், மாற்றுத்திறனாளிகள் சேவையினை ஊக்குவிக்கும் வகையில் மாநில விருதுகள் வழங்கப்பட்டும் வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் திறனை மேற்கொள்ளும் வகையில் அவர்கள் உற்பத்தி செய்யும் கைவினைப்போருட்களை சந்தைப்படுத்தியும், அவர்கள் தன்னிச்சையாக பிறரைச் சாராமல் வாழ்வதற்கு பயன்பெறும் நவீன உதவி உபகரணங்கள் பற்றியும் விவரங்களைக் காட்சிப்படுத்தியும் அவர்களின் திறனை வெளியுலகினரும் உணர வேண்டும் என்பதற்காகவும் இந்தாள் கொண்டாடப்படுகிறது.

மேலும், நாம் அனைவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்கியும், அவர்களுக்கு தடையற்ற சூழலை அமைத்தும் அவர்களை நம் வாழ்வில் ஒருங்கிணைப்போம் என உறுதி கொள்வோம் என்று முதலமைச்சர் மூ.க ஸ்டாலின் தெரிவித்தார்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here