திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கம் தொடக்க விழா, தமிழக கல்வித்துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பள்ளி மாணவர்களுக்குக்கான நூலக செயலியினை அறிமுகம் செய்ததோடு மட்டுமல்லாமல், விழாவில் பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான விழிப்புணர்வு கையேட்டையும் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
பிறகு கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் அவர்கள் கூறியதாவது,
- பள்ளி மாணவர்களுக்கான நூலக செயலி திட்டத்தின் படி, ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து, அனைத்து மாணவர்களுக்கும் நூலகத்திலிருந்து வாரம் ஒரு நூலினை வழங்க வேண்டும். அதனை அவர்கள் வீட்டிற்கு எடுத்து சென்று படித்து முடித்த பின்பு, நூலகத்தில் திருப்பி கொடுத்துவிட்டு அடுத்த நூலை எடுத்துச் செல்லலாம்.
- இவ்வாறு செய்யும் பொழுது, மாணவர்களின் திறன் மேம்படும். அவர்கள் படித்த நூலினை பற்றி விமர்சனமாகவும், ஓவியம் வரைந்தும், நாடகம் நடத்தியும், கலந்துரையாடல் செய்தும் வெளிபடுத்தலாம். நூல் அறிமுகம், புத்தக ஒப்பீடு, மேற்கோள்கள் குறிப்பிடுதல், கதாப்பாத்திரங்களை மதிப்பீடு செய்தல், புத்தகம் தன் கதை கூறுதல் மற்றும் குறு ஆய்வுக் கட்டுரையை சமர்பித்தல் போன்ற மாணவர்களின் படைப்புகள் எதுவாயினும் அதனை பள்ளிகள் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- அதில் சிறந்த மாணவர்களின் படைப்புகளை தேர்வு செய்து, அவர்களை வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்குமாறு செய்ய வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களை மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பின் அதிலும் வெற்றி அடைந்தவர்களுக்கு மாநில அளவில் நடத்தப்படும் முகாமில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக முகாமில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 பேர் என்ற வகையில் 114 பேர் பங்கேற்ப்பார்கள்.
- இந்த முகாம் தலைச் சிறந்த பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும் கொண்டதாக ஏற்பாடு செய்யப்படும். இந்நாளில் குழந்தை எழுத்தாளர்களுடன் மாணவர்கள் உரையாடிட வாய்ப்பும் ஏற்படுத்தப்படும். இது மட்டுமல்லாது, மாணவர்க்குக்கான சிறப்பு நிகழ்ச்சிகளோடு அவர்களின் புத்தக அனுபவப் பகிர்வுகளும் நடைபெற இருக்கின்றன. இந்த முகாமில் கலந்துக் கொள்பவர்களுக்கு இடையே நடக்கவிருக்கும் இப்போட்டியில் வெற்றி பெறுபவருக்கு சுற்றுலா ஏற்பாடு செய்து தரப்படும்.
- “அறிவுப் பயணம்” என்ற பெயரில் வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு செல்லக் கூடிய வாய்ப்பும் அளிக்கப்படும். இந்த அருமையான பயணத்தில், ஆவணக் காப்பகங்கள், உலகப் புகழ்பெற்ற நூலகங்கள் போன்ற பலவற்றை காணும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் துவங்கப்பட்டுள்ள இந்த நூலக செயலி திட்டத்தின் மூலமாக, பள்ளி மாணவர்கள் “உலக அறிவைப் பெற முடியும்” என்று கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறியுள்ளார்.
இவ்விழாவில் ஆட்சியர் மா.பிரதீப்குமார் அவர்களும், பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தக்குமார், இணை இயக்குனர் அமுதவள்ளி, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர் மதிவாணன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
RECENT POSTS:
- இந்தியா முழுவதும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் 11705 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது! Central Govt Jobs 2023
- தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு! Central Govt Jobs 2023
- பல்வேறு காலியிடங்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Central Govt Jobs 2023
- டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை அறிவிப்பு! Tamil Nadu Govt Jobs 2023
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் புதிய வேலை வாய்ப்பு! Tamil Nadu Govt Jobs 2023