புயல் எதிரொலி..! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

0
52

தமிழகத்தில் தற்பொழுது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று வங்ககடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று புயலாக மாற உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது காரைக்கால் பகுதிகளில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும் சென்னையில் இருந்து 640 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களி்ல் அதிகனமழை பெய்யக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மதியம் முதல் நாளை வரை விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here