ஏப்பா தம்பி இன்னைக்கு லீவ்லாம் ஒன்னும் இல்ல… ஒழுங்கா ஸ்கூலுக்கு போபா… மாவட்ட கலெக்டரின் நகைச்சுவை பேச்சு! இணையத்தில் வைரல்..!

0
59

இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் சமூக வலைதள பயன்பாடு அதிகரித்துள்ளது. அந்த வகையில் மாணவன் மற்றும் ஆட்சியரின் டுவிட்டர் பதிவு தற்பொழுது வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் காரணமாக 22 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நேற்றும் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் விருதுநகர் மாவட்டத்திற்கு விடுமுறை விடப்படுமா என்று ட்விட்டரில் மாணவர்கள் சிலர் ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு மாவட்ட ஆட்சியர் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். அந்த பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பதிவில் மாணவன் ஒருவன் விருதுநகர் மாவட்டத்திற்கு புயல் காரணமாக லீவ் ஏதும் விட வாய்ப்பிருக்கா என்று மாணவர் ஒருவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு மாவட்ட ஆட்சியர் புயல் உடைய தாக்கம் நம்ம மாவட்டத்திற்கு குறைவு தான். அதனால் ஒழுங்கா உங்க சைக்கில ரெடி பண்ணி ஸ்கூல் போற வழிய பாருங்க என்று அட்வைஸ் செய்து ரிப்ளை செய்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here