நல்லா சாப்பிடுங்க…! குரங்குகளுக்கு விருந்து வைக்கும் விசித்திர மனிதர்கள்…! எதனால தெரியுமா?

Today World News 2023

நாம் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் போது அங்கு அதிகம் குரங்குகள் செய்யும் சேட்டைகளை கண்டு மகிழ்வோம். அதோடு அதற்க்கு உணவு பொருட்களையும் வழங்குவோம். ஆனால் தாய்லாந்து நாட்டில் பாங்காக் அருகே உள்ள லோப்புரி என்னும் சுற்றுலா தலத்தில் குரங்குகளுக்கு செம்ம விருந்து வைப்பார்களாம். இது சற்று விசித்திரமாக தான் இருக்கிறது.

குரங்குகள் என்றாலே அதிஷ்டத்தை கொடுக்கும் என அந்த ஓர் மக்கள் நம்புகிறார்கள். அதனால் அந்த குரங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 3000 நீண்ட வால் உடைய குரங்குகளுக்கு பிரத்தியேகமாக உணவை தயார் செய்து விருந்து வைக்கிறார்கள். பழங்கள், தானிய வகைகள், நூற்றுக்கணக்கான் தின்பண்டங்கள் மற்றும் இனிப்பு வகைகளையும் வைத்து குரங்குகளை சாப்பிட வைத்து ரசிப்பார்கள். அதுமட்டுமல்லாமல், அங்குள்ள மனிதர்கள் குரங்குகளை போல உடை அணிந்து குரங்குகள் முன் நடனம் ஆடுவார்கள்.

இந்த விழாவை பார்ப்பதற்கென பல நாடுகளிலிருந்து சுற்றுலா தலமான லோப்புரிக்கு வருகிறார்கள். இந்த குரங்கு பஃபே திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். இந்த விழா வந்தால் அங்குள்ள குரங்குகளுக்கு ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM