திடீரென ஏற்பட்ட சம்பவத்தால்… இருளில் மூழ்கியது பிரேசில்…! என்னதான் நடந்தது?

World News Today 2023

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்வெட்டு ஏற்ப்பட்டதால் தென் அமெரிக்க நாடான பிரேசில் இருளில் மூழ்கியது. மின்சார உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக நீர் மின்நிலையங்கள் விளங்குகிறது. இந்நிலையில் நேற்றைய தினத்தில் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் திடீரென பிரேசில் நாட்டில் உள்ள 25 மாகாணங்களும் இருளில் மூழ்கிவிட்டன.

மின்சார சப்ளை ஆலையில் ஏற்ப்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணத்தினால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இத்தகைய திடீர் மின் வெட்டால் நாட்டினுடைய பொது சேவைகள் மற்றும் கல்வி நிலையங்கள் அனைத்தும் முடங்கின. அதுமட்டுமல்லாமல் அந்நாட்டில் இயங்கக்கூடிய மின்சார ரயில்கள் முழுவதும் தடைபட்டதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். மேலும், இயல்புநிலைக்கு திரும்பும் நடவடிக்கையில் மின்வாரிய அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM