கபாலீஸ்வரர் கோயில்ல டிரைவர், ஆபீஸ் அசிஸ்டன்ட், லைப்ரரின், உதவி மின் பணியாளர் வேலை! 10th, 8th, B.Sc, ITI படிச்சிருந்தா விண்ணப்பிக்கலாம்!

Driver, Office Assistant, Librarian, Assistant Electrical Worker Job in TNHRCE latest TN Govt Jobs Today

மயிலாப்பூர்ல இருக்க அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்ல வேலை செய்ய ஆட்கள் தேவை என அறிவிப்பை வெளியிட்டிருக்காங்க தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை. சென்னை மாவட்டத்துல வேலை செய்ய விருப்பம் உள்ளவங்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க. தமிழ்நாடு அரசு வேலை உங்களுக்குத்தான்.

இப்ப வந்துருக்க அறிவிப்புல, டிரைவர், ஆபீஸ் அசிஸ்டன்ட், லைப்ரரின், உதவி மின் பணியாளர் வேலை காலியிடங்கள் இருக்குதாம். நீங்க பத்தாவது, எட்டாவது, பி.எஸ்சி, ஐடிஐ படிச்சிருந்தா விண்ணப்பிக்க முடியும். ஆஃப்லைன் முறையில் அதாவது அஞ்சல் வழியில விண்ணப்பிக்க வேண்டுமாம்.

தமிழக அரசின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை! ஜஸ்ட் 10வது படிச்சிருந்தாலே போதுமாம்…!

மாசம் பொறந்தா தமிழ்நாடு அரசு சம்பளமாக ரூ.15,900 to ரூ.58,600 வாங்கிக் கொள்ள முடியும். மொத்தம் நான்கு காலியிடங்கள் தான் இருக்கு. லேட் பண்ணாம உடனே விண்ணப்பிச்சுடுங்க. விண்ணப்பங்கள் வந்து சேர ஜனவரி 27, 2024 வரைக்கும் கால அவகாசமாக குடுத்துருக்காங்க.

உங்களுக்கு பதினெட்டு வயசு ஆகிருந்தாலே விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 வரை வயது வரம்பு அறிவிச்சுருக்காங்க. Kapaleeswarar Temple Official Notification லிங்கை க்ளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்துவிட்டு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து, பிழையில்லாமல் பூர்த்தி செய்து Executive Officer, Arulmigu Kapaleeswarar Temple, Mylapore, Chennai-600004 என்ற அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top