இனிமே உங்க பிள்ளைகளும் ஸ்கூல் போகமாட்டன்னு அடம்பிடிக்க மாட்டங்கா..! ஏன் தெரியுமா? தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க…

இன்றைய காலகட்டத்தில் தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போன்ற பல்வேறு திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மாணவர்களும் எளிதில் படித்து அவர்கள் வாழ்வில் முன்னேற தமிழக அரசு வழிவகுத்து வருகிறது.

அந்த வகையில், தற்பொழுது மீண்டும் ஒரு புதிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டிலேயே முதல்முறையாக காணொலி வடிவில் பாடங்களை அளிக்கும், ‘மணற்கேணி’ என்ற செயலியை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

Dont worry that your children wont go to school anymore Do you know why You will be surprised if you know read it now

இந்த புதிய செயலியை பயன்படுத்தி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எளிதில் பாடங்களை கற்பிக்க முடியும். மேலும், இந்த மணற்கேணி செயலியில் 27 ஆயிரம் வரை கருப்பொருள் அடங்கிய பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 25 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM