உங்க கிட்டையும் GPAY, Phone Pay இருக்கா? இனி அது தேவையில்லை…

இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மையமாக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் காலத்தில் கையில் பணம் வைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஆன்லைன் பணபரிவர்த்தனை முறை உலகம் முழுவதும் உள்ள பட்டிதொட்டி எங்கும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் UPI எனப்படும் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகத்தான் GPAY, Phone Pay போன்ற செயலியின் மூலம் பணம் பரிமாற்றம் செய்து வருகிறோம்.

இந்நிலையில், தற்பொழுது GPAY, Phone Pay செயலிக்கு ஆப்பு வைக்கும் விதமாக புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கடைகளிலோ அல்லது SWIGGY, AMAZON போன்ற செயலிகளின் மூலம் நாம் எந்தவொரு பொருளை வாங்கினாலும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த பொதுவாக GPAY, Phone Pay போன்ற செயலியைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால், தற்பொழுது UPI PLUGIN என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் SWIGGY, AMAZON போன்ற செயலியிலேயே UPI பேமெண்ட் செய்து கொள்ள முடியும்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM