உங்க பிள்ளைகளும் ஸ்கூல் போறாங்களா? அப்போ இனி அவங்களும் மாதம் ரூ.1000 வாங்கலாம்..! முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் தற்பொழுது தனியார் பள்ளிகளின் தரத்திற்கு ஏற்ப அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் தரமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு அரசு பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியானது. தமிழக பள்ளிகளின் தரம் மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழக அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களில் சுமார் 1000 மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை 10 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாணவர்கள் இந்த உதவித்தொகையை பெற வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெற உள்ள திறனாய்வு தேர்வினை எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டுள்ளது.

திறனாய்வு தேர்வு குறித்து அரசு தேர்வுகள் இயக்கமானது அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, வின்னபங்களில் மாணவர்கள் பெயர்கள், முகவரி உள்ளிட்ட விவரங்களை தெளிவாக கொடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், பெற்றோரின் தொலைபேசி எண்ணை மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த திறனாய்வு தேர்வில் விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM